அவசியமின்றி இந்த காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் வரவேண்டாம் : காவல்துறை அறிவுறுத்தல்!!
25 August 2020, 3:53 pmகோவை : மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடுள்ளதால் சக காவலர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் பொதுமக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில், பொதுமக்களை காக்கும் காவல்துறை சுகாதாரத்துறை போன்ற அரசு அதிகாரிகளும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சக காவலர்கள் அச்சத்தில் உள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் காவலர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் தீவிரமாக முடுக்கி விடப்பட்டது.
இதனால் பொதுமக்கள் அவசியமின்றி காவல் நிலையத்திற்கு வர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
0
0