கோவை நஞ்சுண்டாபுரம் குப்பை மேட்டில் பயங்கர தீ : நீண்ட நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 9:12 am
Cbe Fire -Updatenews360
Quick Share

கோவை : நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள குப்பை மேட்டில் பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ராமநாதபுரம் பகுதியில் இருந்து நஞ்சுண்டாபுரம் செல்லும் வழியில் குப்பை மேடு உள்ளது. இங்கு அடிக்கடி தீப்பிடிப்பது வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் ஒன்பது மணி அளவில் அந்த குப்பைமேட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இப்படி பற்றி எரிந்த தீ அந்த பகுதியில் வேகமாக பரவத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முற்பட்டனர். அதேசமயத்தில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வந்த தீயணைப்பு துறையினர் தொடர்ந்து நீண்ட நேரமாகப் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினரும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 85

0

0