கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய யுக்தி : புதிய மாநகராட்சி ஆணையர் உறுதி!!

31 August 2020, 6:52 pm
Cbe NEw Corp Commissioner - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பி. குமரவேல் பாண்டியன் பதவியேற்றுக் கொண்டார்.

கோவை மாநகராட்சி ஆணையாளராக இருந்த ஷ்ரவன்குமார் ஜடாவத் தமிழ்நாடு வேளாண்துறை துணை செயலாளராக பதவி உயர்வுபெற்றதால் சென்னை பெருநகர் துணை ஆணையராக இருந்த பி.குமரவேல் பாண்டியன் கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக பி. குமரவேல் பாண்டியன் இன்று பதவியேற்றார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, 5 மாதமாக உலகம் முழுவதும் கொரோனா பரவி பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

தற்பொழுது நம் நாட்டிலும் நோய் தொற்று பரவியுள்ளது. முழுமையாக நோய் தொற்றிலிருந்து விடுபட கோவையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நோய்தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நோய்பரவலை கட்டுப்படுத்த சென்னையை போல் திட்டமிட்டு கொரோனா நோய் தொற்றை ஒழிக்க சென்னையில் திட்டமிட்டதை போல் சிறு,சிறு மாற்றங்கள் செய்து கோவையிலும் விரைவில் கட்டுப்படுத்துவோம்.

மேலும் கோவை மக்களிடம் கூற விரும்புவது,அடிக்கடி தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றாலும் 6 அடி தனிமனித இடைவெளியை பின்பற்றவேண்டும். கட்டாயம் கைகளை அடிக்கடி சோப்பால் தூய்மையாக கழுவ வேண்டும்.

கட்டாயம் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றினாலே கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.மேலும் வணிகநிறுவனங்கள் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது. அதிகமான கூட்டத்தை சேர்த்தாமல் அளவான வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

சென்னையை பொருத்தவரை பெரிய மாநகராட்சி, ஆகவே அங்கு 11 மண்டலங்களாக பிரித்து நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டோம்.ஒவ்வொரு மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. அதுபோல் கோவையை 5 மண்டலங்களாக பிரித்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடக்கும் மருத்துவ முகாம்களில் லேப் டெக்னீசியன்கள் பயன்படுத்தப்படும். தினமும் வீடுவீடாக சளி, இருமல் என்ற சோதனை, மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும் என தெரிவித்தார்.

Views: - 0

0

0