சொல்லாததையும் செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி : இனிப்பு வழங்கி நன்றி தெரிவித்த மக்கள்!!

22 February 2021, 4:08 pm
Thx To SP Velumani - Updatenews360
Quick Share

கோவை : தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவக்கி வைத்த அமைச்சர் வேலுமணிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் புதிய தார்சாலை அமைத்தல், சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், உள் அரங்கத்துடன் கூடிய பூங்கா, மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்க, என சுமார் ஐந்து கோடியே இருபது இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.

இந்நிலையில் 87 வது வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைளை நிறைவேற்றிய அமைச்சர் வேலுமணிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த பகுதி மக்கள், பணிகள் துவக்கிய இடங்களில் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பிரின்ஸ் அவென்யூ, பாரதி நகர், வசந்தம் நகர், கே.பி.பி.நகர், மகாராஜா காலனி, பை பை நகர், பிருந்தாவன் சர்க்கிள் குறிஞ்சி நகர் என 87 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற இதில் குணியமுத்தூர் பகுதி கழக செயலாளர் மதனகோபால், அவைதலைவர் எஸ்.எம்.உசேன், பகுதி துணை செயலாளர் திருமதி சிந்து இளங்கோ, 87 வது வார்டு தலைவர் இளங்கோ,செயலாளர் பாஸ்கர், துணை செயலாளர் கே.சி.செல்வகுமார், சிவா, சின்னதம்பி, விஜயகுமார், ரகு , கோவை மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, பொறியாளர்கள் லட்சுமணன்,ஞானவேல்,சுந்தர்ராஜ்,விமல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 3

0

0