ஆடிப் பெருக்கு பேரூரில் தர்ப்பணம் செய்ய தடை : வெறிச்சோடிய படித்துறை.!!

2 August 2020, 9:47 am
Cbe Perur - Updatenews360
Quick Share

கோவை : கொரோனா ஊரடங்கால் ஆடி பெருக்கை முன்னிட்டு பேரூர் படித்துறை மற்றும் சுற்றுவட்டார பொது இடங்களில் இறந்தவர்களுக்கான தர்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் முழு ஊரடங்கு அமலானதால் மாவட்டம் முழுவதும் வெரிச்சோடி காணப்பட்டது.

ஆடி பெருக்கு ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும். அரசு விடுமுறை விடப்படுவதால் எப்போது கோவில்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு இறந்த முன்னோர்களை வணங்குவது, படையலிடுவது, மற்றும் கோவை பேரூர் படித்துறை மற்றும் அருகே உள்ள தனியார் திருமணம் மண்டபங்களில் ஒவ்வொரு ஆண்டும் தர்பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.

இந்த ஆண்டு கொரோனா பொது  முடக்கம் அமலில் உள்ளதால், பேரூர் படித்துறை மற்றும் தனியார் திருமணம் மண்டபங்களில் இறந்தவர்கள் தற்பணம் செய்யவும், பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலானதால் எப்போது பொது இடங்களில் மக்கள் கூட்டமாக காணப்படும் அனைத்து பகுதிகளில் முதல் முறையாக வெறிச்சோடி காணப்பட்டது.

Views: - 0

0

0