கீழே கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி… தள்ளாடும் வயதிலும் தென்பட்ட நேர்மையை கவுரவித்த காவல்துறை..!

Author: Babu Lakshmanan
28 September 2021, 8:49 am
Cbe old woman- updatenews360
Quick Share

கோவை: கோவையில் சாலையில் கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டிக்கு கோவை மாவட்ட காவல்துறையினர் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தியுள்ளனர்.

கோவை கே.ஜி சாவடி பகுதியை சேர்ந்தவர் கருப்பம்மாள் என்ற 60 வயது மூதாட்டி. இவர் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள சோனா பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒருவர் சாலையில் தவறவிட்ட செல்போனை பார்த்தார். அந்த செல்போனை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் சென்ற மூதாட்டி, அதனை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

மூதாட்டியின் நேர்மையை பார்த்து நெகிழ்ந்த போலீசார் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அந்த செல்போன் யாருடையது என்பதை விசாரித்தபோது, கருப்புசாமி (28) என்பவருடய ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போன் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத மனிதர்கள் இன்னும் பூவுலகில் வாழ்ந்து கொண்டிருப்பது உலகிற்கு அழகூட்டும் விதமாக அமைந்துள்ளது.

Views: - 126

0

0