காக்கிக்குள் ஒளிந்திருந்த காந்தகுரல்: வேற லெவலில் பாடி அசத்திய காவல்துறை அதிகாரிகள்..!!(வைரல் வீடியோ)

Author: Rajesh
7 February 2022, 11:23 am
Quick Share

கோவை: ஆயுதப்படை கவாப்பு நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஐஜியும், காவல் கண்காணிப்பாளரும் போட்டி போட்டு பாட்டு பாடி அனைவரையும் அசத்தியுள்ளனர்.

போலிஸ் என்றாலே கையில் லத்தியும், பேச்சில் அதிகார தோரனை மட்டுமே நினைவுக்கு வருகின்ற நிலையில் அதனை மாற்றி அமைத்திருக்கின்றனர் கோவை காவல் துறை உயரதிகாரிகள். ஆயுதப்படை கவாப்பு நிறைவு நிகழ்ச்சி கோயமுத்து பி ஆர் எஸ் கிரவுண்டில் நடந்திருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐஜி சுதாகரும் கோயமுத்தூர் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினமும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இசைக்கச்சேரி நடந்தன. இந்த நிலையில் திடீரென மேடைக்கு வந்த எஸ் பி செல்வ நாகரத்தினம் மற்றும் சுதாகர் பாடல்களை பாடி அசத்தினர்.

போட்டி என்றாலே மேடையில் பாட பொதுவாக தேர்ந்தெடுக்கப்படும் என்னம்மா கண்ணு சௌக்கியமா பாடல் போட்டி போட்டுக்கொண்டு பாடி அசத்தினர். நடிகர் சத்யராஜ்கான மலேசியா வாசுதேவன் குரலில் ஐஜி சுதாகர் பாட, நடிகர் ரஜினிகாந்த் கான எஸ் பி பி குரலில் எஸ்பி செல்வ நாகரத்தினம் பாடி அசத்தினார்.

காவல்துறை உயரதிகாரிகள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு இந்தப் பாடலைப் பாடிய பொழுது அரங்கம் அதிர சக காவல் துறையினர் ஆரவாரம் செய்திருக்கின்றனர். காவல்துறையினர் என்றாலே கையில் லத்தியையும் பேச்சில் அதிகாரத்தை மட்டுமே கண்டவர்களுக்கு காவல்துறை அதிகாரிகளின் காந்தக் குரலால் கட்டமைக்கப்பட்ட முந்தைய கரடுமுரடான காவல்துறை பிம்பம் உடைத்தெரிந்திருக்கின்றன. இந்த நிலையில் இவர்களின் பாடல் இணையத்தில் வட்டமடித்து கவனம் ஈர்த்து வருகிறது.

Views: - 928

0

0