கோவை மாவட்டத்தில் தீவிரவாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும், தமிழக அரசு சார்பில் தீவிரவாத தடுப்பு பிரிவு செயல் பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் குறைந்ததற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் கோவையில் இருந்து லாரி மூலம் கேரளாவிற்கு ஜெலட்டின் வெடிபொருள் கடத்தப்படுவதாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெலட்டின் கடத்திச் செல்லும் லாரியை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இறங்கினர்.
இன்று அதிகாலை கேரளாவிற்கு லாரி செல்லும் வழியில் மதுக்கரை அருகே தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கண்காணித்தனர். அப்போது அதிகாலை 4 மணிக்கு ஒரு லாரி அந்த வழியாக வந்தது.காவல் துறையினர் அந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.
லாரி ஓட்டுனரிடம் லாரியை சோதனை நடத்த வேண்டும் என கூறினர்.இதனால் லாரி ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது லாரிக்குள் ஜெலட்டின் குச்சிகள் பெட்டி பெட்டியாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இவற்றின் மொத்த எடை 2 ஆயிரம் கிலோ இருக்கும் என கூறப்பட்டது. உடனே தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கடத்தப்பட்ட லாரியை மதுக்கரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
லாரியை ஒட்டி சென்ற ஓட்டுநர் சுபேரையும் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவரிடம் மதுக்கரை போலீசார் மற்றும் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கேரளாவில் உள்ள கல்குவாரிக்கு மலைகளை உடைக்க பயன்படுத்த கொண்டு செல்லப்படுவதாக ஓட்டுநர் சுபேர் கூறியதாக கூறப்படுகிறது.
இதற்கு உரிமம் உள்ளதா? 2 ஆயிரம் கிலோ வெடி மருந்து ஜெலட்டின் குச்சி கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் வைத்து உள்ளார்களா ? என்று விசாரணை நடைபெறுகிறது. மேலும் அதன் உரிமையாளர் குறித்தும் விசாரணை நடக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.