கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையை சேர்ந்த போலீஸ் பலி..!

19 August 2020, 5:54 pm
Quick Share

கோவை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கோவையை சேர்ந்த காவலர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் கோவையில் மட்டும் 9 ஆயிரத்து 758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் கோவையில் 201 பேர் உயிரிழந்துள்ளனர்.. இந்த நிலையில், வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி காவலர் ஒருவர் கோவையில் பலியாகியுள்ளார். கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர் மின்ஹாஜுதீன் (வயது 30). இவர் பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி நிஷா பர்வீன் (வயது 25). இந்த தம்பதியினருக்கு முஃபாஸ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மின்ஹாஜுதீன்-க்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. தொடர்ந்து அவர் நேற்று 9.30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலையே பலியாகினார். இவரது இறுதிச் சடங்குகள் பூ மார்க்கெட் அருகே அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் போலீஸ் ஒருவர் பலியான சம்பவம் சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 27

0

0