போக்சோவில் கைதான ஆட்டோ ஓட்டுநர்..!

14 February 2020, 9:45 pm
Pollachi Posco Arrest- updatenews360
Quick Share

கோவை : பொள்ளாச்சியில் 16 வயது பள்ளி சிறுமியை கர்பமாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி ஜோதி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் யாசின். இவன் பொள்ளாச்சி அரசு பள்ளியில் பயிலும் 16 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி மாணவியை தனிமையில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இது குறித்து அந்த மாணவி யாசினிடம் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆத்திரமடைந்த யாசின் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

செய்வதறியாத மாணவி இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து யாசினை கைது செய்த மகளிர் காவல் நிலைய போலீசார், அவர் மீது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.