மழலையர் பள்ளியில் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி விழா… கிருஷ்ணர் வேடமிட்டு பிரமிக்க வைத்த குழந்தைகள்..!!

Author: Babu Lakshmanan
18 August 2022, 5:05 pm
Quick Share

கோவை : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வண்ண வண்ண ஆடைகளுடன் வேடமிட்டு மழலைப் பள்ளியின் குழந்தைகள் பிரமிக்க வைத்தனர்.

உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறையில் அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திரத்தில், கிருஷ்ணரின் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிஸி பீ ப்ளே ஸ்கூலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் கல்பனா முரளிதரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், ஆண் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமிட்டும், பெண் குழந்தைகளை ராதை போல் வண்ண ஆடைகளுடன் அலங்கரித்தும் கிருஷ்ணருக்கு உகந்த உணவுகளையும் படையலிட்டனர்.

மேலும், கிருஷ்ணர், ராதை வேடமிட்ட குழந்தைகள் உறியடித்தும், புல்லாங்குழல் வாசித்தும் பிரமிக்க வைத்தனர். தொடர்ந்து ஆசிரியர்கள் கடவுளுக்கு படையலிட்ட பிரசாதங்களை குழந்தைகளுக்கு வழங்கி, கிருஷ்ணர் ஜெயந்தியை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தில் பள்ளியின் ஆசிரியர்கள் பிரியா, லோகேஸ்வரி, சுதா மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Views: - 477

0

0