கோவை முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம் : லஞ்சப் புகாரால் அதிரடி நடவடிக்கை!!

8 April 2021, 2:08 pm
Cbe CEO Tranferred -Updatenews360
Quick Share

கோவை : லஞ்சப் புகாரில் சிக்கிய கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா தஞ்சாவூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உஷா நியமிக்கப்பட்டார். இவர் பணியில் சேர்ந்த முதல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக தனியார் பள்ளிகளிடம் அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு பணம் வசூல் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ரேஸ்கோர்ஸ் உள்ள முதன்மை கல்வி அலுவலரின் வீட்டில் ரெய்டு நடந்தது.

இந்த சோதனையின்போது கணக்கில் வராத ஒரு லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவர் லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக அங்கீகாரம் பெற்ற புலனாய்வு அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் கோவை மாவட்டத்தின் புதிய முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக தங்களின் பொறுப்பை ஏற்க வேண்டும் என அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Views: - 4

0

0