மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம் : கைது செய்த சில மணி நேரங்களில் நடந்த சம்பவம்!!
30 September 2020, 11:38 amகோவை : கோவையில் கொள்ளை சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட நபர் நேற்று இரவு போலிஸ் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளார்.
கோவை உக்கடம் ஜி.எம் நகரை சேர்ந்தவர் ஜமேஷா( வயது 24). இவர் ஒ௫ வ௫டத்திற்க்கு முன்னர் கஞ்சிக்கோணம்பாளையத்தில் உள்ள கோவிலில் தி௫ட்டு வழக்கில் கைது செய்யபட்டு பிணையில் இருந்தார்.
கடந்த ஒரு வருடமாக போலீசாருக்கு பயந்து மறைந்திருந்த இவரை போத்தனூர் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும், நேற்று மாலை அவரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு ம௫த்துவமனைக்கு போத்தனூர் போலீஸார் அழைத்து சென்றனர்.
பின்னர் மருத்துவமனையின் உள் பரிசோதனை செய்யும்போது கைதி ஜமேஷா தப்பி ஒட்டம் ஓடினார். ஒரு வருடமாக கொள்ளை சம்பவம் தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளியான இவர் கைது செய்ப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் காவல் துறையினரின் கண்ணில் மண்ணை தூவி மாயமானதை தொடர்ந்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வ௫கின்றனர்.