கொடை மலைவாழ் மக்களுக்கு கரம் நீட்டிய கோவை : நிவாரணம் வழங்கிய தனியார் தொண்டு நிறுவனம்!!

12 June 2021, 7:19 pm
Kodai Food Serve - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கான‌லில் வாழ்வாதார‌ம் பாதிக்க‌ப‌ட்ட‌ மலைவாழ் ம‌க்க‌ளுக்கு கோவையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் நிவார‌ண‌ம் வ‌ழ‌ங்கிய‌து.

த‌மிழ‌க‌த்தில் கொரோனா ஊர‌ட‌ங்கினால் பெரும்பாலான‌ ம‌க்க‌ள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வாழ்வாதார‌ம் பாதிக்க‌ப‌ட்ட‌ன‌ர். இதைத் தொட‌ர்ந்து கொடைக்கான‌லில் சுற்றுலாப‌ய‌ணிகளை ந‌ம்பியே பெரும்பாலான‌ ம‌க்க‌ள் வாழ்வாதார‌த்தை இழ‌ந்த‌ சூழ‌லில் ப‌ல்வேறு த‌ர‌ப்பின‌ர் உத‌விக‌ளை வ‌ழ‌ங்கி வ‌ந்த‌ன‌ர்.

இந்த‌ சூழ‌லில் கொடைக்கான‌லில் ம‌க்க‌ளுக்கு கோயம்புத்தூரை சேர்ந்த‌ வைச‌ன் சேரிடபிள் ட்ர‌ஸ்ட் என்னும் த‌னியார் நிறுவ‌ன‌த்தின் சார்பில் நிவார‌ண‌ பொருட்க‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

இந்த நிக‌ழ்ச்சியை வ‌ட்டாட்சிய‌ர் ச‌ந்திர‌ன் துவ‌ங்கி வைத்தார். கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்தை சார்ந்த கார்த்திக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் இந்த நிகழ்வில் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

Views: - 118

1

0