கோவையில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சீல்.!!

20 August 2020, 1:31 pm
Scent Factory Seal- Updatenews360
Quick Share

கோவை : பிரபல வாசனைத திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் 10 பேர் உட்பட 14 பேருக்கு கொரோனா உறுதியானதால் வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை மாவட்டம் காரமடை அருகே மருதூர் ஊராட்சிக்குட்பட்ட சென்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது இங்கு சுமார் 150 க்கும் மேற்பட்டோர் அங்கு பணிபுரிந்து வருகின்றனர் கடந்த வாரம் அங்கு இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பின்னர் அங்கு தொழிற்சாலையை தற்காலிகமாக மூடப்பட்டது.

சென்ட் தொழிற்சாலை பணிபுரிந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்றைய தினம் முடிவுகள் வெளிவந்த நிலையில் தொழிற்சாலையில் கேரளா மாநிலத்தில் சேர்ந்த 10 பேர் மற்றும் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 4 பேர் மொத்தம் 14 பேருக்கு நேற்று ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த தொழிற்சாலையில் 14 நாட்களுக்கு மூடு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் தொழிற்சாலைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Views: - 29

0

0