புதுப்பொலிவுடன் உருவாகும் கோவை பந்தய சாலை : பிரம்மிக்கவைக்கும் ஏற்பாடு!!(போட்டோஸ்)

By: Udayachandran
7 February 2021, 2:30 pm
Cbe Race Course - Updatenews360
Quick Share

கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை ரேஸ்கோர்ஸ் சாலை புதுப்பிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகத்தில் பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளலூர் பேருந்து நிலையம் முதல் கோவையில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் புகுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கோவை காந்திபுரம் சாலையில் ஜொலிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதே போல கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலை புத்தம் புது பொலிவுடன் மாற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே பொதுமக்கள் அதிகம் விரும்பும் பகுதியில் ஒன்றான பந்தய சாலை, பொதுமக்கள் இளைப்பாறவும், உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்ள பயன்பட்டு வருகிறது.

தற்போது பந்தய சாலையில் உள்ள ரவுண்டானாவில் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. தற்போது இதற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியாகி மலைக்க வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக…

Views: - 109

0

0