கோவையை தலைமையிடமாக கொண்டு கொங்குநாடு மாநிலமாக அறிவிக்க வேண்டும் : கொ.மு.க சார்பில் தீர்மானம்..!

12 July 2021, 1:34 pm
Kongunadu KOMUKA- Updatenews360
Quick Share

கோவை : கொங்கு நாடு தனி மாநிலமாக அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு கொங்குநாடு முன்னேற்ற கழகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொங்கு நாடு என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை இணைத்து தனி யூனியன் பிரதேசம் அமைக்க உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில், கொங்கு நாடு முன்னேற்ற கழகம் சார்பில் கொங்கு நாடு தனி மாநிலமாக மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவையில் இன்று நடைபெற்றது அப்போது கொங்குநாடு முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூறியதாவது: வளர்ச்சிப் பாதைக்கு மட்டுமே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல மாநிலங்களை பிரித்து இரண்டாவது மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல கோவையை தலைமையிடமாக கொண்டு கொங்கு நாட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இதன் மூலம் இங்குள்ள மாவட்டங்கள் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும். சிறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி பல மடங்காக உயரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Views: - 102

0

0