ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி!!

22 August 2020, 10:04 am
Krishna College Func - Updatenews360
Quick Share

கோவை : கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி இணையதளம் வாயிலாக நடைபெற்றது.

கோவை புதூர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சூழலில், மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் பல கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வழக்கமாக நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறாமல் உள்ளது.

ஆனால், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரியில் இன்று இணையதளம் வாயிலாக முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 12 துறைகளிலும் முதலாம் ஆண்டில் இணையும் மாணவர்கள், மற்றும் ஏற்கனவே கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என சுமார் 800 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத்துறை பேராசிரியரும், பேச்சாளருமான ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

கல்லூரியின் முதல்வர் பழனியம்மாள் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி, முதன்மை செயல் அதிகாரி சுந்தர்ராமன், அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 30

1

0