கோவையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எஸ்பி வேலுமணி பிரச்சாரம் : அதிமுக சாதனைகளை விளக்கி வாக்கு சேகரிப்பு

Author: Babu Lakshmanan
12 February 2022, 11:23 am
Quick Share

கோவை : கோவை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் முக்கியத் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில், கோவையில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 36, 37 மற்றும் 38வது வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பிரவீனா பார்த்திபன், நதியா துரைராஜன் மற்றும் ஷர்மிளா சந்திரசேகர் ஆகியோரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பிரச்சாரம் செய்தார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட வடவள்ளி பகுதிகளில் இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், திமுக ஆட்சியின் குறைகளையும் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் ஆர். சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 399

0

0