ரூ. 50 லட்சத்தை அபேஸ் செய்த திமுக பிரமுகர் தலைமறைவு : திருப்பதி ஏழுமலையான் பெயரில் ஏலச்சீட்டு நடத்தி நாமம் போட்ட சம்பவம்..!!

12 November 2020, 1:25 pm
Chit fund - updatenews360
Quick Share

கோவை : சூலூரில் அரசின் அனுமதியில்லாமல் ஏலச்சீட்டு நடத்தி, பொதுமக்களிடம் வசூல் செய்த ரூ. 50 லட்சம் பணத்துடன் திமுக நிர்வாகி தலைமறைவாகிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவையை அடுத்துள்ள சூலூர் நகர திமுக துணை செயலாளராக இருப்பவர் ஜெயா. இவர் திருப்பதி என்னும் பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இதில், சேர்ந்துள்ள சூலூர், ராமநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களிடம் சீட்டு பணம் வசூலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக சீட்டு எடுத்தவர்களுக்கான தொகையை ஜெயா திருப்பி கொடுப்பதில் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதன் காரணமாக, சீட்டு எடுத்து வந்தவர்கள் அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். ஆனால், தொடர்ந்து, காரணங்களை மட்டும் பதிலாக கொடுத்து வந்துள்ளார் ஜெயா.

இதனால், அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் 40க்கும் மேற்பட்டோர் சூலூர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், ஜெயா தலைமறைவாகியது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை தேடும்பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 25

0

0