கோவையில் ஒரு வயது குழந்தை உட்பட 217 பேருக்கு கொரோனா : 10 பேர் பலி.!

9 August 2020, 7:32 pm
Cbe Corona 1 - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் ஒரு வயது மற்றும் மூன்று வயது பெண் குழந்தைகள் உட்பட 217 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் குடியிருப்பைச் சேர்ந்த 23 வயது இளைஞர், 33 வயது பெண் ஆகிய 2 பேருக்கும் ஞாயிற்றுக்கிழமை கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காமாட்சி புரம் பகுதியை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை, செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தைக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் சௌரிபாளையத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருந்தகத்தைச் சேர்ந்த 51 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 22 வயது பெண், சித்தாபுதூரைச் சேர்ந்த 25 வயது மருத்துவர், பொள்ளாச்சியைச் சேர்ந்த 70 வயது மருத்துவர், பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பைச் சேர்ந்த 45 வயது ஆண், ரேஸ்கோர்ஸ் எஸ்.பி.ஐ. அதிகாரிகள் குடியிருப்பைச் சேர்ந்த 17 வயது சிறுவன், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர மேட்டுப்பாளையத்தில் 14 பேர், சூலூரில் 15 பேர், செல்வபுரத்தில் 12 பேர், ராமநாதபுரத்தில் 7 பேர், பி.என்.புதூரில் 6 பேர், சௌரிபாளையத்தில் 5 பேர் உள்பட 217 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 10 பேர் பலியாகியுள்ளனர்.