அடிக்கடி பழுதாகும் சிக்னல் : விபத்து ஏற்படும் அபாயம்!!

5 September 2020, 2:07 pm
Taffic Signal - Updatenews360
Quick Share

கோவை : கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் அடிக்கடி பழுதாவதால் அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

கோவை பாபநாயக்கன் பாளையம் குப்புசாமி நாயுடு மருத்துவமனை அருகே போக்குவரத்து சிக்னல் உள்ளது. காந்திபுரம் பகுதியில் இருந்து அவினாசி சாலை செல்ல பிரதான சாலையாக உள்ள இந்த இடத்தில் உள்ள சிக்னல் அடிக்கடி பழுதாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால் கடந்த இரண்டு நாட்களில் பல்வேறு விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து சிக்னலை உடனடியாக சரி செய்து எப்போதும் செயல்படும் வண்ணம் பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 0

0

0