கனமழையால் சென்னை போல் மாறிய கோவை : தேங்கிய மழை நீரை அகற்றும் பணி தீவிரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2023, 1:27 pm
Rain Flood - Updatenews360
Quick Share

கோவையில் நேற்று மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மிக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் சேர்ந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

குறிப்பாக கோவை மாநகரில் அவிநாசி சாலை மேம்பாலம், வடகோவை மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி அருகில் உள்ள மேம்பாலங்களுக்கு அடியில் மழைநீருடன் சேர்ந்து, சாக்கடை நீரும் தேங்கி நின்றதால் மேம்பாலங்களுக்கு அடியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து நேற்று இரவு அந்த மழை நீரை அகற்றும் பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். இதனை அடுத்து தற்போது மேம்பாலத்திற்கு அடியில் தேக்கமடைந்து இருக்கும் மண் மற்றும் கழிவுகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

அனைத்து மேம்பாலங்களிலும் இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் காரணமாக மேம்பாலங்களுக்கு அடியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Views: - 273

0

0