லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து 2 பேர் பலி.!!
13 August 2020, 10:39 amகோவை : செட்டிபாளையம் அருகே இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர்
கோவை புறநகர் பகுதியான செட்டி பாளையம் அருகே அமைந்துள்ளது எல் என் டி பைபாஸ் சாலை. இங்கு இன்று அதிகாலை வேகமாக வந்த கேரளா பதிவு எண் கொண்ட ஈச்சர் லாரியும், தமிழக பதிவு எண் கொண்ட டேங்கர் லாரியும் ஒன்றுடன் ஒன்று வேகமாக மோதிக்கொண்டது.
இந்த கோர விபத்தில் கேரளாவை சேர்ந்த வீராசாமி மற்றும் உடன் வந்த கிளீனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தமிழகத்தை சேர்ந்த சேகர் சிறு காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸ் இறந்தவர்களின் உடலை மீட்டு கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். காலை வேலையில் நடந்த இந்த சம்பவம் குறித்து செட்டிபாளையம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.