பைக் உரிமையாளர் கண் முன்னே வாகனம் திருட்டு.. பரிதாபமாக பின்னாடியே ஓடும் சிசிடிவி காட்சி…!

Author: Babu Lakshmanan
13 January 2022, 1:20 pm
Quick Share

கோவை: தனது இரு சக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்வதை பார்த்த வாகனத்தின் உரிமையாளர் கூச்சலிட்டுக் கொண்டு வாகனத்தின் பின்னாலேயே ஓடும் காட்சி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பி.என்.புதூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது எக்ஸ்எல் சூப்பர் வண்டியை சாவியுடன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு பொருள் ஒன்றை எடுக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற நபர் ஒருவர் சாவியுடன் வாகனம் நிற்பதை பார்த்ததும் வண்டியை ஸ்டார்ட் செய்து திருடி சென்றார்.

அப்போது வாகன உரிமையாளர் கூச்சலிடவே அவ்வழியாக வந்த நபர் இருசகக்ர வாகனத்தில் துரத்தி செல்ல வாகன உரிமையாளார் பரிதாபமாக பின்னாடியே ஓடும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது இந்த திருட்டு சம்பவ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 340

0

0