கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் விறுவிறு: மீண்டும் போக்குவரத்து மாற்றம்!!
21 November 2020, 11:08 amகோவை : உக்கடம் ஆத்துப்பாலம் இரண்டாம் கட்ட பணிகள் துவங்க உள்ளதால் மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் பொள்ளாச்சி உடுமலை, பழனி, கேரளா செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
மாநகருக்குள் இருந்து குனியமுத்தூர் சுந்தராபுரம் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் கடந்த மாதம் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று உக்கடம் ஆத்துப்பாலம் பாலம் பணிகள் நடந்து வரும் பகுதியில் ரோடு அமைக்கப்பட்டு இரு, நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
இப்பாதையில் பொள்ளாச்சி வழியாக பேருந்துகள், நகர பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு போக்குவரத்து போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆத்துப்பாலம் பகுதியில் விரைவில் மேம்பால பணிகள் துவங்க உள்ளதால் மீண்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு தெரிவித்தார்.
0
0