கோவை மாநகரில் வாகனங்களை இயக்குவதில் புதிய கட்டுப்பாடு : மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு

Author: Babu
26 July 2021, 4:18 pm
Quick Share

கோவை : விபத்துக்களை தடுக்கும் விதமாக கோவை மாநகரில் வாகனங்களை இயக்குவதில் புதிய கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்ட ஆட்சியர் ள‌ அவர்களின்‌ உத்தரவுபடி கோவை மாநகர காவல்‌ எல்லைக்குள்‌ கீழ்கண்டவாறு வேகக்கட்டுப்பாடு நிர்ணயம்‌ செய்து ஆணையிடப்பட்டுள்ளது. கீழ்கண்ட சாலைகளில்‌ மணிக்கு 30 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வாகனங்களை இயக்க நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.

(1) காந்திபுரம்‌ முதல்‌ கணபதி வரையிலும்‌.
(2) 100 அடி ரோடு.
(3) கிராஸ்கட்‌ ரோடு.
(4) பாரதியார்‌ ரோடு.
(5) சுக்கிரவார்பேட்டை முதல்‌ மேம்பாலம்‌ வரையிலும்‌.
(6) வைசியாள்‌ வீதி முதல்‌ செல்வபுரம்‌ வரையிலும்‌.

கோவை மாநகரில்‌ ஏணைய பகுதிகளில்‌ உள்ள சாலைகளில்‌ மணிக்கு 40 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்ருள்ளது. கோவை மாநகர எல்லைக்குள்‌ ஏற்பரும்‌ விபத்துக்களை குறைப்பது தொடர்பாக மேற்கண்ட வேகக்கட்டுப்பாருகளை நடைமுறைபடுத்த கோவை மாதகர காவல்‌ ஆணையர்‌ அவர்கள்‌ மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்கள்‌.

மேற்கண்ட வேகக்கட்டுப்பாட்டினை வாகன ஓட்டிகள்‌ மீறினால்‌ அவர்கள்‌ மீது மோட்டார்‌ வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்‌ என கோவை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளும்‌, பொது மக்கஞம்‌ மேற்கண்ட வேகக்கட்டுப்பாட்டினை தவறாது கடைபிடிக்குமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 224

0

0