மீண்டும் அரசியல் களத்தில் மு.க. அழகிரி..! திமுகவின் கையைவிட்டு போகிறதா தென்தமிழகம்…! புலம்பும் ஸ்டாலின்

2 September 2020, 2:12 pm
Quick Share

கோவை: மு.க.அழகிரி புகைப்படத்துடன் வெற்றியை உறுதி செய்ய வாரீர் என்ற வாசகங்களுடன் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளதால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த சூழலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்களின் ஆதரவும், மணவர்களின் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக அரியர் தேர்வுகளை ரத்து செய்ததால் மாணவர்கள் ஆதரவு பெருகி உள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினோ, கலைஞர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப முடியாமல் தத்தளித்து வருகிறார்.

உட்கட்சி பூசலை சமாளிக்க முடியாமல் திணறியும் வருகிறார். இந்த சூழ்நிலையில், கருணாநிதியின் தவப்புதல்வன் மு,க. அழகிரி தேர்தலில் போட்டியிட அவரது ஆதரவாளர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திமுக-வில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவரது அரசியல் நடவடிக்கைகள் முடங்கிப் போயிருக்கின்றன. இந்த நிலையில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் மு.க.அழகிரி திமுகவிற்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் திமுக உறுப்பினர் மு.க.அழகிரிக்கு அஞ்சாநெஞ்சனே நேரம் நெருங்கிவிட்டது உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர் கழக ஆட்சி என்றும், கலைஞர் ஆட்சி அமையட்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் இடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவார் என்று அனைவரும் எண்ணி கொண்டிருக்கும் நிலையில் மு.க.அழகிரிக்கு வெற்றியை உறுதி செய்ய வாரீர் என்ற வாசகங்களுடன் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மு.க. அழகிரிக்கு பெரும் ஆதரவு திரண்டு வருவதால் ஸ்டாலின் கதிகலங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில் முக அழகிரியின் ஆதரவை பெற கட்சிக்குள் ஸ்டாலின் இணைப்பாரா… அப்படி அழைத்தால் அவர் இணைவாரா..??, இருவரும் பகையை மறந்து கைகோர்ப்பார்களா…?? என திமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் வரும் 9ம் தேதி திமுக செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பொதுசெயலாளர் பதவி துரைமுருகனுக்கா, அல்லது கனிமொழிக்கா இருவரில் யாருக்கு வழங்குவது என்ற குழப்பத்தில் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். கருணாநிதி வாரிசுகளால் திமுகவில் குழப்பம் ஏற்பட்டு வரும் நிலையில், ஸ்டாலினுக்கு மற்றொரு தலைவலியாகவே மு.க.அழகிரியின் போஸ்டர் பார்க்கப்படுகிறது. மேலும் கோவையில் போஸ்டர்களை ஓட்டியது யார் என்பது குறித்து திமுகவினர் விசாரித்து வருகின்றனர்.

Views: - 11

0

0