காலில் அடிபட்டு வலியுடன் சுற்றி திரியும் காட்டு யானை : சிகிச்சை அளிக்க வனத்துறையினருக்கு வலுக்கும் கோரிக்கை..!!

Author: Babu Lakshmanan
28 February 2022, 4:17 pm
Cbe elephant - updatenews360
Quick Share

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக காலில் அடிபட்ட காட்டுயானை உணவு தேட செல்லமுடியாமல் தவித்து வருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான், என பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் அருகே உள்ள கிளாஸ் ஹவுஸ்  பகுதியில் காட்டு யானை கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் நடக்கமுடியாமல் கடந்த ஒரு வாரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறது.

இதனால் அது தனக்குத் தேவையான உணவை தேட முடியாமல் தவித்து வருகிறது. இதுபற்றி யானை பாகன்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கூறியும் வனத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இதுவரை எந்த மருத்துவ சிகிச்சையும் கொடுக்காததால் உணவின்றி தவித்து வருகிறது.

பரிதாபமாக உள்ள காட்டு யானையை உடனடியாக வனத்துறை அதிகாரிகள் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 608

0

0