மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம் பகுதியில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானைகள் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பனூர், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை பாகுபலியுடன் கூடுதலாக 3 காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக, அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் சமயபுரம் கிராமத்தில் உள்ள கிராம சாலையை கடந்து செல்கின்றன. ஊருக்கு மத்தியில் உள்ள இந்த சாலையில் தினமும் காலை, மாலை வேளைகளில் உலா வரும் காட்டு யானைகள் நேற்று சற்று மாறுபட்டு கால்நடைகளுடன் ஹாயாக வாக்கிங் வந்தது.
சமயபுரம் பகுதியில் பசு மாடுகளை சிலர் வளர்த்து வரும் நிலையில், அந்த மாடுகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பி ஊருக்குள் வந்த போது, அந்த பசு மாடுகளை பின்தொடர்ந்து காட்டு யானை பாகுபலி மட்டுமல்லாமல், மற்ற யானைகளும் வாக்கிங் வருவது போல் பசு மாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இன்றி ஒய்யாரமாக நடந்து வந்ததை அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாகவும், சற்று அச்சத்துடன் பார்த்தனர்.
இப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இதுவரை காட்டு யானை பாகுபலி எவரையும் தாக்கியதில்லை என்பதால் சமயபுரம் பகுதி மக்களின் ஒரு குடும்ப நபராகவே மாறிவருகிறது காட்டு யானை பாகுபலி. இதிலும் ஒருசில யானைகள் அச்சத்தில் குடியிருப்புக்குள் அங்கும் இங்கும் ஓடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.