கோவை ; பெண் ஊழியரை தகாத வார்த்தைகள் பேசி அடிக்க முயன்ற தனியார் நிறுவன உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சேலம் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. டீச்சர் ட்ரைனிங் முடித்துள்ள இவர் காளப்பட்டி பகுதியில் உள்ள சாஸ்தா பில்டர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தில் மூன்று மாதமாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் காயத்ரியிடம் அத்துமீறி பேசுவதும், வேண்டுமென்றே வேலைப்பளுவை அதிகரித்தும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், போன் மூலமாக அதிகப்படியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு உள்ளான காயத்ரி, நிறுவன உரிமையாளரை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி உரிமையாளர் காயத்ரியை அலுவலகத்தில் வைத்து அடிக்க முற்பட்டுள்ளார். ஐந்து நிமிடம் தாமதமாக அலுவலகத்திற்கு வந்தால் 500 ரூபாய் அபராதம் விதித்து உள்ளார்.
இவரின் நடவடிக்கை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் காயத்ரி பீளமேடு காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் மனுவை எழுதி கொடுத்தார். புகாரின் பேரில் பீளமேடு காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.