கோவை மாநகராட்சி 61 வது வார்டில் பா.ஜ.க.சார்பாக போட்டியிடும் பெண் வேட்பாளர் சிந்துஜா தனது கைக்குழந்தையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் வாக்குசேகரிக்க இன்றே கடைசி நாளாகும். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க. தனியாக தேர்தலை சந்திக்கிறது.
இதில்100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சி 61 வது வார்டில் பா.ஜ.க.வேட்பாளராக இளம் பட்டதாரி பெண்ணான சிந்துஜா தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தனது வார்டுக்கு உட்பட்ட வீட்டின் அருகே கள்ளிமடை பகுதியில், வீடு வீடாக தனது கைக்குழந்தையுடன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
தாம் வெற்றி பெற்றால் நீண்ட நாட்களாக இந்த பகுதிகளில் நிலவும் குடிநீர் பிரச்னை, பஸ் போக்குவரத்து, சாலை வசதி மேம்படுத்துவது, கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுப்பது உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன், என தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின்…
பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…
வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
This website uses cookies.