கோவையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
25 November 2020, 9:25 pmகோவை: கோவையில் கஞ்சா விற்பனை செய்து வந்த வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.
உக்கடம் புல்லுக்காடு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடைவீதி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கடந்த 8ஆம் தேதி போலீசார் அங்கு ரகசியமாக ஆய்வு நடத்தினர். அப்போது, புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த வலிபர் ஒருவர் சுமார் 1.100 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் நவ்சாத் என்பதும், இவர் தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குச் சென்று கஞ்சா வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நவ்சாத் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை சிறையில் உள்ள அவரிடம் போலீசார் இன்று வழங்கினர்.
0
0