90 வயது மூதாட்டியை சீரழிக்க முயன்ற 20 வயது நபர் : காமத்தால் நிதானத்தை இழந்த இளைஞர்!!

13 November 2020, 1:05 pm
Kerala Rape - updatenews360
Quick Share

கோவை : கோவை அருகே 90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த மைதீன் (20) என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது வீதியில் இருக்கும் மூதாட்டியின் வீட்டிற்குள் திடீரென நுழைந்துள்ளார். அங்கு தனியாக படுத்துக் கிடந்த 90 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், மூதாட்டி அலறியுள்ளார்.

இதனைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள், மைதீன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல்நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பேருந்து நிலையம் அருகே இருந்த மைதீனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 31

0

0

1 thought on “90 வயது மூதாட்டியை சீரழிக்க முயன்ற 20 வயது நபர் : காமத்தால் நிதானத்தை இழந்த இளைஞர்!!

Comments are closed.