சிறுமியை தாயாக்கிய இளைஞருக்கு 20 ஆண்டு சிறை : கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan29 November 2021, 4:40 pm
கோவை : 18 வயது பூர்த்தியாகாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த நாகமுத்து (வயது 27) என்பவர் 18 வயது பூர்த்தியாகாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால், அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தையடுத்து, சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அறிந்த பெற்றோர், அந்த சிறுமிக்கு, நாகமுத்துவுடன் திருமணம் செய்துக்கொடுத்துள்ளனர்.
தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. ஆனால், அதன் பிறகு அந்த சிறுமிக்கு, நாகமுத்து மற்றும் அவரது குடும்பத்தால் ஏற்பட்ட பிரச்சினையால், காவல்துறையில் சிறுமி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், அந்த சிறுமி 18 பூர்த்தியாகாத வயதில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தததையடுத்து, நாகமுத்து மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
2018 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக ஓராண்டிற்கு பின் கொடுக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு அளிக்கப்பட்டது.
போக்சோ பிரிவில் நாகமுத்துவிற்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, நாகமுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
0
0