திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு.!

14 August 2020, 3:37 pm
Tirupur GH Collector - Updatenews360
Quick Share

திருப்பூர் : அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கவனிப்பு மற்றும் ஈர்ப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருப்பூர் தாராபுரம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையம் மற்றும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு வாழ வழியின்றி பொது இடங்களில் இருப்பவர்களை மீட்டு உரிய சிகிச்சை அளித்துவரும் மறுவாழ்வு அளிக்கும் மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை எடுப்பவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கான பயிற்சி ஆகியவற்றை இன்று மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

Views: - 8

0

0