இருக்கையில் அமர்ந்து மனுவை வாங்கிய ஆட்சியர் : அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோபம்..!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2021, 7:15 pm
Cbe Collector Issue Admk -Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட ஆட்சியர், அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மனு அளித்த போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தனது இருக்கையில் அமர்ந்து இருந்த படி, மனுவை வாங்கியதால் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோபமடைந்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கோவையில், தடுப்பூசி மையங்களை அதிகபடுத்த கோரி மனு அளிக்க இன்று, வந்தனர்.

அப்போது கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள், அமர்ந்து இருந்தவாறு, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் வழங்கிய மனுவை வாங்கினார்.

அப்போது அமர்ந்து இருந்து, மனு வாங்கிய ஆட்சியரிடம், “முன் எப்போதும் இல்லாத வழக்கமாக அமர்ந்து தான் மனுவை வாங்குவீர்களா? மக்கள் பிரதிநிதி நாங்கள்” என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கோபமடைந்தனர்.

இதனை தொடர்ந்து ஆட்சியர் சமீரன், எழுந்து அவர்களிடம் மனுவை வாங்கினார், இதனை தொடர்ந்து அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களையும் அமர வைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை உடனடியாக, மேலிடத்தில் பேசி, விரைவில் உங்களது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வைப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 219

0

0