நண்பன் வீட்டிற்கு தோழியை அழைத்துச் சென்று பலாத்காரம்.. சக கல்லூரி மாணவன் செய்த துரோகம்… குமரியில் அதிர்ச்சி..!!
Author: Babu Lakshmanan4 அக்டோபர் 2022, 1:23 மணி
நண்பனை நம்பி அவனது வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண், கன்னியாகுமரியில் உள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். அவருடன் அதே கல்லூரியில், சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞம் பயின்று வருகிறார்.
இருவருக்கும் கல்லூரியில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். அவரை பல பக்கம் பெற்றோர்கள் தேடிய நிலையில், பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, அவர் சொன்ன தகவலை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். தன்னுடன் படித்த இளைஞர் ஒருவர், நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தனது மகளுக்கு நேர்ந்த துயரச சம்பவம் குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, அந்த மாணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0
0