கொரோனா சிகிச்சை மையமாக மாறிய கல்லூரி, திருமண மண்டபம் : திருப்பூரில் 450 படுக்கைகள் தயார்!!

18 April 2021, 2:12 pm
Corona Bed -Updatenews360
Quick Share

திருப்பூர் : கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் கல்லூரிகளில் 450 படுகைகளோடு சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரானா தொற்று வைரஸ் பரவல் இரண்டாம் அலை வேகமாக பரவி வரக் கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலும் தினந்தோறும் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுவரை 1,866 பேர் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாது தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் கல்லூரிகளில் தற்போது சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருகிறது .

அதற்காக தற்போது முதல் கட்டமாக 450 படுகைகளோடு அவிநாசி , தாராபுரம் பகுதிகளில் தனியார் கல்லூரிகளிலும் , உடுமலையில் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் , திருப்பூர் கல்லூரி சாலையில் தனியார் திருமண மண்டபம் உள்ளிட்ட படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட கூடிய வகையில் மருத்துவ குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Views: - 32

0

0