செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை

Author: Udhayakumar Raman
25 November 2021, 4:59 pm
Quick Share

அரியலூர்: செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார். இவர் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் வீட்டில் செல்போன் பயன்படுத்தியதாக பெற்றோர்கள் திட்டியதால் மன அழுத்தத்தின் காரணமாக கடந்த 10ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதனை அடுத்து திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் இன்று உயிரிழந்தார். இது குறித்து செந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 181

0

0