கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: கன்னியாகுமரியில் சோகம்..!!

17 January 2021, 7:44 pm
hanging sucide - updatenews360
Quick Share

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி லூர்துமாதா தெருவைச் சேர்ந்தவர் மேரி ஸ்டானிஸ்டா. இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பி.பி.ஏ.2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே மேரி ஸ்டானிஸ்டா மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்நிலையில், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் மேரி ஸ்டானிஸ்டா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மேரி ஸ்டானிஸ்டா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 9

0

0