மாப்பிள்ளை பிடிக்காததால் கல்லூரி மாணவி தற்கொலை!!

6 September 2020, 12:35 pm
College Student Suicide - Updatenews360
Quick Share

வேலூர் : பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை பிடிக்காததால் கல்லூரி மாணவி பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகள் கல்பனா வேலூரில் உள்ள மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவருக்கு கடந்த ஒரு வருடமாக திருமணம் செய்து வைப்பதற்காக வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் 33 வயது மிக்க வங்கியில் பணிபுரியும் ஒருவர் இவரை பெண் பார்க்க வந்துள்ளார்.

மணமகனுக்கு பெண்ணை பிடித்து விட்டதால் திருமணம் செய்துகொள்ள ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் கல்பனா அவருக்கு வயது அதிகம் என்பதால் இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று கூறியுள்ளார் இதனால் பெற்றோர்களுக்கும் கல்பனாக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் அந்த மணமகனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது

இந்நிலையில் இரவு கல்பனா தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது அவர் போர்வையால் உடலை மூடிக் கொண்டு தன் கழுத்தை பிளேடால் வெட்டி கொண்டுள்ளார்.ரத்தம் அதிகமாக சென்றதால் மயங்கிய நிலையில் இருந்த கல்பனாவை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளின் மனதை புரியாமல் அலட்சியம் காட்டும் பெற்றோர்களுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0