கல்விச் சான்றிதழ்களை மீட்க கல்லூரி மாணவர் கோரிக்கை : தன்னார்வ தொண்டு அமைப்பை சேர்ந்தவர் மீது புகார்!!

12 November 2020, 5:30 pm
Certificate - Updatenews360
Quick Share

கோவை : கல்வி சான்றிதழ்களை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தனியார் கல்லூரி மாணவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த நிலையில், தன்னார்வ தொண்டு அமைப்பை சேர்ந்த ஒருவர் தனது அசல் கல்விச் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு தர மறுப்பதாக புகார் தெரிவிக்கிறார்.

இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எம் டிரஸ்ட் என்ற தன்னார்வ அமைப்பு என்னை கல்லூரியில் சேர்த்து விடுவதாகக் கூறி எனது அசல் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டது. ஆனால் நான் கேட்ட பாடப் பிரிவுக்கு பதிலாக வேறு பாடப்பிரிவில் சேர்த்துவிட்டனர். இது கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் எனக்கு தெரிந்தது.

இதை தொடர்ந்து கல்லூரியை விட்டு நீங்க நினைத்த போது எனது அசல் சான்றிதழ்கள் தன்னார்வ தொண்டு அமைப்பை சேர்ந்த பிரபு என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நான் எனது அசல் சான்றிதழ்களை அவரிடம் கேட்ட போது அவர் தர மறுக்கிறார். எனவே எனது கல்வி சான்றிதழ்களை பெற்று தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 18

0

0