பாரம்பரிய நெல் அறுவடையில் அசத்தும் மாணவிகள்: வழிகாட்டும் விவசாயிகள்…!!

7 March 2021, 7:13 pm
WhatsApp Image 2021-03-06 at 2.13.43 PM (1)
Quick Share

தஞ்சாவூர்: வேளாண் கல்லுாரி மாணவிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி அனைவரையும் அசர வைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்புச்செல்வம் இயற்கை வேளாண் விவசாயி இவர் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகமான பூங்கார் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, காட்டு யானம் கொத்தமல்லி சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட 24 வகையான நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.

இந்நிலையில் தஞ்சையை அடுத்த செங்கிபட்டியில் உள்ள தனியார் வேளாண் கல்லுாரி மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து கேட்டறிந்து குருவாடிப்பட்டி கிராமத்திற்கு வந்து பாரம்பரிய நெல் சாகுபடி குறித்தும் இயற்கையான முறையில் உரம் தயாரிப்பு குறித்தும் பாரம்பரிய நெல்லின் சிறப்பையும் கேட்ட மாணவியர், விவசாயியின் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்து மழையின் போது சாய்ந்து கிடந்த மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை மாணவியர்கள் அறுவடை செய்து கொடுத்து விவசாயிக்கு உதவி செய்தனர்.

இதுகுறித்து மாணவியர்கள் கூறும்போது தாங்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து கிராமங்களில் தங்கி விவசாயிகளின் அனுபவங்கள் கஷ்டங்கள் விவசாய சாகுபடி யுக்திகள் மற்றும் விவசாய நிலத்தில் பூச்சிகளால் ஏற்படும் தொந்தரவுகள் இயற்கை வேளாண் சாகுபடி முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும் அறுவடையின் போது ஏற்படும் இடர்பாடுகள் ஆகியவற்றை தெரிந்து விவசாயிகளுக்கு உதவி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Views: - 20

0

0