நடிகர் அஜித் – வடிவேலு இடையே பிரச்சனை இது தான்… அந்த ஒத்த வார்த்தையால் 20 ஆண்டுகள் பிரிவு.. நகைச்சுவை நடிகர் வெளியிட்ட ரகசியம்..!

Author: Babu Lakshmanan
23 September 2022, 12:45 pm
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். தற்போது, இவர் வலிமை வெற்றியைத் தொடர்ந்து துணிவு படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கவே இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

ஹீரோக்களில் எப்படி அஜித் முன்னணி நாயகனாக இருக்கிறாரோ..? அதேபோல, நகைச்சுவையில் நம்பர் காமெடியன் என்ற இடத்தில் நடிகர் வடிவேலு இருக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து கடைசியாக கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ராஜா திரைப்படத்தில் நடித்திருந்தனர். அப்படத்திற்கு இருவரும் ஒன்றாக நடிக்கவில்லை அவர்கள் ஒன்றாக நடிக்காமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வடிவேலுவுடன் நடிப்பதை நடிகர் அஜித்குமார் விரும்பாதது ஏன்..? என்பது குறித்து, வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ள சக நடிகர் Telephone Raj தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.

அதாவது, ராஜா திரைப்படத்தில் அஜித்துடன் நடித்து வந்த வடிவேலு அவருடன் நெருங்கி பழக அரம்பித்தார். அப்படி ஒரு நாள் நடிகர் வடிவேலு, அஜித்தை “அஜித்தே” என பெயர் சொல்லி அழைத்து விட்டார்.

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து தரப்பினரிடமும் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்ளும் நடிகர் அஜித்திற்கு அது பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே, அவர் நாகரீகமாக வடிவேலுவுடன் நடிப்பதை நிறுத்தி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Views: - 460

0

0