உயர்நீதி மன்ற உத்தரவை நிலைநாட்டிய சரவணம்பட்டி காவல் ஆய்வாளருக்கு பாராட்டு..!

25 August 2020, 2:09 pm
Inspector Appreciate - Updatenews360
Quick Share

கோவை : விநாயகர் சதுர்த்தி தினத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில், உயர் நீதி மன்ற உத்தரவை நிலை நாட்டிய சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் செல்வராஜூக்கு கமிஷனர் பாராட்டுகளை தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ஆண்டு தோறும் வழக்கமாக விநாயகர் சிலை வைத்து வழிபடும் இந்து அமைப்பினரிடம், இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக உயர் நீதி மன்றம் சில கட்டுப்படுகளை விதித்திருந்தது குறித்து சரவணம்படி காவல் ஆய்வாளர் பேசினார்.

சரவணம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வராஜ் அனைத்து இந்து அமைப்பினரிடம், ஆலோசனை பேச்சு வார்த்தைகள் நடத்தி, பொது இடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், இதுவரை இல்லாத விதமாக தனது சொந்த முயற்சியில் சரவணம்பட்டி பகுதியில் தற்காலிக குளம் அமைத்து, அதில் சரவணம்பட்டி காவல் நிலைய சரகத்தில் இந்து அமைப்பினரால் வைக்கப்பட்டிருந்த 44 விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.

இதன் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விநாயகர் சிலைகளை கரைத்து வந்த இந்து அமைப்பினர், இந்த புது முயற்சியால் தாங்கள் கொரோனா நோய் தொற்று காலத்திலும், உயர் நீதிமன்றம் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு பாதுகாப்பாக விநாயகர் சதுர்த்தி விழாவினை நடத்திட வழிவகுத்த, இ-3 சரவணம்பட்டி காவல் நிலைய காவல் ஆய்வாளரின் செயலுக்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.

மேலும் உயர் நீதி மன்றம் உத்தரவினை மீறி வைக்கப்பட்டிருந்து விநாயகர் சிலைகளை வைத்தவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்து, சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சணைகள் ஏதும் ஏற்படாத வண்ணம் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் அவர்களின் மெச்சத்தகுந்த பணியினை பாராட்டி, பாராட்டு மடல் வழங்கி கோவை மாநகர காவல் ஆணையாளர் கௌரவித்தார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Views: - 28

0

0