85 வயது மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை..! போலீசார் விசாரணை…

Author: Udhayakumar Raman
4 December 2021, 7:58 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பட்டி கோனார் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி குப்பாயி அம்மாள் (85). இவரது கணவர் இறந்த பின்னர் இவரது மகன் மற்றும் இரண்டு மகளுடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது மகன் திருச்சி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து இரண்டு மகளுடன் வாழ்ந்து வந்த அவர் இரண்டு மகளுக்கு திருமணம் செய்து கொடுத்த பின்னர் தனிமையில் வாழ்ந்து வந்தார். மேலும் இவருக்கு முதியோர் பென்சன் ரூபாய் 1000 வந்து கொண்டிருந்தது. அதனை வைத்து தனது வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மனம் உடைந்த நிலையில் இருந்த குப்பாயி அம்மாள் இன்று வீட்டில் அருகில் இருந்த கிணற்றில் தன்னுடைய சேலையை கட்டி அதன் வழியாக உள்ளே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் கிணற்றில் இறங்கி மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 245

0

0