கம்யூனிஸ்ட் கட்சியின் கே. பாலகிருஷ்ணனுக்கு கொரோனா : சென்னையில் மருத்துவமனையில் அனுமதி

12 October 2020, 2:24 pm
k balakrishnan 1- updatenews360
Quick Share

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களையும் பாதித்து வருகிறது. தமிழகத்தில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த தொற்று பாதிப்பிற்கு ஆளாகி வரும் நிலையில், அவர்கள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 49

0

0