வாக்களிக்காத வழக்கறிஞரின் வீட்டை சூறையாடிய கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் : கதவுகளை உடைத்து அட்டகாசம்..!!!

Author: Babu Lakshmanan
14 October 2021, 7:50 pm
Communist - updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : தனகனந்தல் கிராமத்தில் தங்களுக்கு வாக்களிக்காத வழக்கறிஞரின் வீட்டை கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் ஒன்றியம் 15வது வார்டில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அலமேலு ராமசாமி என்பவரும், அதேபோல் தனகனந்தல் கிராமத்தில் ஊராட்சி தலைவர் பதவிக்கு கோவிந்தசாமி என்பவரும் போட்டியிட்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெற்றது. இதில, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அலமேலு ராமசாமி மற்றும் ஊராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கோவிந்தராஜ் ஆகிய இருவருமே தோல்வியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அதே கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் செம்மலை என்பவர் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என கூறி, அவரது வீட்டை நேற்று இரவு தனது ஆதரவாளர்களுடன் சென்று அவரது வீட்டின் கதவை உடைத்து சூறையாடினர். இந்த சம்பவம் அனைத்தும் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில் வழக்கறிஞர் செம்மலை தனது ஆதரவாளர்களுடன் இன்று திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட ராமசாமி மற்றும் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கோவிந்தராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார். மேலும், துணை காவல் கண்காணிப்பாளர் கங்காதரன் நேரில் சந்தித்து தமது மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 265

0

0