சிறையில் கிடைத்த சகவாசம்…. நண்பனின் மனைவியுடன் நெருக்கம் : கொலையில் முடிந்த உல்லாசம்!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2024, 1:42 pm
Murder
Quick Share

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சின்னக்காவனம் பகுதியை சேர்ந்தவர் லக்ஷ்மணன் (26). பொன்னேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான லக்ஷ்மணன் மீது திருட்டு, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மீஞ்சூர் அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணுவும், லக்ஷ்மணனும் புழல் சிறையில் இருந்த போது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகியுள்ளனர். விஷ்ணுவுக்கு லட்சுமணனின் மனைவியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து லட்சுமணனுக்கு தெரிய வந்ததால் தமது நண்பனான விஷ்ணுவிடம் இதனை தட்டி கேட்டுள்ளார். பொன்னேரியில் விஷ்ணுவுடன் மது அருந்திய லக்ஷ்மணன் விஷ்ணுவுடன் அவரது ஊரான தோட்டக்காடு சென்று அங்கும் அமர்ந்து நண்பர்களுடன் மது அருந்தியுள்ளனர்.

அப்போது மீண்டும் மனைவியுடன் ஏற்பட்ட தொடர்பு குறித்து கேட்டபோது விஷ்ணு தமது கூட்டாளிகளுடன் சேர்ந்து லக்ஷ்மணனை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் 5பேரை தேடி வருகின்றனர். மேலும் லட்சுமணனின் மனைவி ரம்யாவிடம் காவல்துறையினர் கள்ளத்தொடர்பு தொடர்பாகவும், கொலை தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியிடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 398

3

1